வெத்திலை தமிழர்கள் வாழ்வில் மிக இன்றியமையாத ஒரு பொருளாகும். கொல்லங்கலட்டி இதன் தாயாக பூமி எனலாம்.இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளின் முக்கிய பயிர்ச்செய்கையாக வெத்திலை இருகின்றது.அயல் கிராமங்களகிய மாவீடபுரம், கருகம்பணை போன்ற இடங்களிலும் இது பயிரிடபடுகின்றது. இதனை ஒருமுறை பயிரிட்டால் பலவருடங்களுக்கு பலன்தரும்.இதனை இங்குள்ள விவசாயிகள் பணப்பயிர் என்று அழைப்பர். வெத்திலை கொடியினப்பயிர், இது முள்முருங்கை மரத்தில் தான் படரும்.
இதனால் முள் முருங்கை இலை கால்நடைகளுக்கு விரும்பிய உணவாக அமைகிறது.இதைவிட வெத்திலை தோட்டத்தைச் சுற்றி வாழை ,கமுகு போன்ற பயிர்களும் பயிரிடபடுகின்றது. ஆகவே வெத்திலை செய்கை மிக வருமானம் தரக்கூடிய ஒன்றாக இருகின்றது.வெத்திலை பயிரிட்டு இரண்டு வருடங்களில் இதன் பயனை அனுபவிக்கலாம், ஒன்ரவிடட ஒருநாள் இதன் இலைகளை பிடுங்கலாம்,சுன்னாகம் சந்தை இதன் மிக முக்கிய சந்தை மையமாக இருகின்றது. இங்கு இலங்கைகயின் பல இடங்களிலில் இருத்தும் வியாபாரிகள் வந்து வெத்திலையை வாங்கிச் செல்வார்கள்.இது வெத்திலை பாக்கு ,பீடா போன்றவைக்க முக்கிய மூல பொருளாக அமைகிறது. வெத்திலை இல்லாத தமிழர்களின் விழாக்களே இல்லை.கலியனதிலிருது கறுமாதி வரை,கோவில் பூசைகள் உட்பட அணைத்து தமிழர்களின் விழாக்களிலும் வெத்திலை தான் முக்கிய கதாநாயகன்.இதனை தாம்பூலம் எனவும் அழைப்பர்
Ingen kommentarer:
Legg inn en kommentar