onsdag 14. november 2012

கொல்லங்கலட்டிக்கிராமம்

 இது மாவிட்டபுரம் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இதன்அயல் கிராமங்க்களாக சரித்திர பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம், மூர்த்தி, தலம்,தீர்த்தம்,மூன்றும் ஒருங்கிணைய பெற்ற கீரிமலை (நகுலேஸ்வரம்:இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில்
 இதுவுமொன்று காங்கேசன்துறை இங்கே மிக பிரமண்டமான சீமேந்து தொழிற்சாலை ஒன்று இருக்கிறது இங்குதான் ஊர் மக்களில் பலரும் பணி புரிகிறார்கள் தெல்லிப்பளை விளிசிட்டி, பன்னாலை, கருகம்பனை, அளவெட்டி, இளவாலை ஆகிய கிராமங்கள் அமைநதுள்ளன, இதில்  கீரிமலைக்கு இன்னுமொரு விசெசமுண்டு.இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் விவசாயிகளாக இருந்தாலும் ஒரு பெரும் பகுதியினர் படித்து மிகபெரிய பதவிகளில் இருந்தனர், இருக்கின்றனர். திரு.சானை. கந்தையா அவர்கள் இக்கிராமத்தின் முதல் விவசாய பட்டதாரி. இவர் விவசாய திணைக்களத்தில் பணிப்பளராக பனிபுரிந்தது மட்டுமல்லாது பல விவசாய சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார்.இவர் எழுதிய கமத்தொழில் விளக்கம் என்ற மாதாந்த சஞ்சிகை அன்றையவிவசாயிகள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தது. இங்கே வெத்திலை மிக முக்கிய விவசாய உற்பத்திப் பொருள்.அத்துடன் தக்காளி, வெங்காயம், வாழை, பலவகை மரக்கறி வகைகளும் பயிரிடபடுகின்றன.

                        கீரிமலை கேனி
        மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கோபுரம்

                                 

Ingen kommentarer:

Legg inn en kommentar